ஹிந்தி தெரியாது என்றால் லோன் இல்லை: வங்கியின் அடாவடி

 

தமிழகத்தில் ஹிந்திக்கு எதிராக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் இந்தியை வலுக்கட்டாயமாக திணிப்பதில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது 

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான் என தமிழக அரசு உறுதிபடக் கூறிவிட போதிலும் மூன்றாம் மொழியை திணிப்பதில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பது தமிழர்களைப் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற பகுதியில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ஒருவர் வங்கியில் லோன் கேட்டு விண்ணப்பித்தபோது அவருக்கு தெரியுமா என்று வங்கி மேலாளர் கேட்டதாகவும் அதற்கு அவர் ஹிதி தெரியாது என்று கூறியதால் உங்களுக்கு லோன் இல்லை என்று கூறி அனுப்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 

இதனை அடுத்து வங்கி மேலாளர் மீது மானநஷ்ட வழக்கு கேட்டு மருத்துவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ஹிந்தி தெரியாது என்பதால் லோன் இல்லை என வங்கி மேலாளர் கூறிய தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரவி அந்த குறிப்பிட்ட வங்கியின் மேலாளருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web