இந்தி தெரியாததால் லோன் இல்லையா? உண்மையில் நடந்தது என்ன?

 

இந்தி தெரியாததால் வங்கி மேலாளர் தனக்கு லோன் இல்லை என்று கூறியதாக ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவர் கிளப்பிய பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனையை வழக்கம்போல் திமுகவினர் அரசியலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் அந்த வங்கியில் பணிபுரியும் சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவரிடம் பிபிசி நிறுவனம் பேட்டி எடுத்தபோது அவர் கூறியதாவது: வங்கியில் கடன் பெற வந்த அந்த ஓய்வு பெற்ற மருத்துவர் ஓய்வூதிய கணக்கை வேறு வங்கியில் வைத்திருந்ததால் அந்த வங்கி கணக்கை தங்களுடைய வங்கிக்கு மாற்றினால் கடன் தருவோம் என்று மேலாளர் கூறியதாக கூறினார் 

மேலும் அந்த வாடிக்கையாளர் விவசாய கடன் தரும்படி கேட்டிருக்கிறார். அப்போது மேலாளர் விவசாய கடன் தொடர்பாக வங்கியில் இருக்கும் அலுவலரை சந்திக்குமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து தான் கடன் பெற தகுதியில்லை என்பது தெரிந்தவுடன் அந்த நபர் ஹிந்தி பிரச்சினையை எழுப்பி உள்ளார் என்றும் எங்கள் வங்கிக்கு வரும் எந்த ஒரு வாடிக்கையாளரிடம் நாங்கள் மொழி பாகுபாடு காட்டியது இல்லை என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார் 

இந்த சம்பவத்தின் உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொண்டு வேண்டுமென்றே அரசியல்வாதிகள் சிலர் சர்ச்சையை கிளப்பி உள்ளனர் என்றும் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார் 

இதிலிருந்து வங்கி லோன் கிடைக்காத ஆத்திரத்தில் வேண்டுமென்றே ஹிந்தி பிரச்சனை கிளப்பப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் புகார் கூறி வருகின்றனர்

From around the web