பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் குறைக்கப்பட்டதா? பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மேலும் எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து உறுதியான தகவலும் இல்லை இந்த நிலையில் பள்ளிகள் திறந்தால் அடுத்த கல்வியாண்டுக்குள் பாடங்களை முடிப்பது கஷ்டம் என்ற காரணத்தால் பத்தாம் வகுப்பில் உள்ள சமூக அறிவியல் பாடங்கள் குறைக்கப்பட்டதாகவும், இதனை அடுத்து இரண்டு புத்தகங்கள் ஆக இருந்த சமூக அறிவியல் பாடம் ஒரே புத்தகமாக மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது இந்த நிலையில் இது குறித்து தமிழக
 
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் குறைக்கப்பட்டதா? பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மேலும் எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து உறுதியான தகவலும் இல்லை

இந்த நிலையில் பள்ளிகள் திறந்தால் அடுத்த கல்வியாண்டுக்குள் பாடங்களை முடிப்பது கஷ்டம் என்ற காரணத்தால் பத்தாம் வகுப்பில் உள்ள சமூக அறிவியல் பாடங்கள் குறைக்கப்பட்டதாகவும், இதனை அடுத்து இரண்டு புத்தகங்கள் ஆக இருந்த சமூக அறிவியல் பாடம் ஒரே புத்தகமாக மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் பாடங்கள் எதுவும் குறைக்கப்படவில்லை என்றும் இரண்டு புத்தகங்கள் ஆக இருந்த புத்தகங்கள் தற்போது மொத்தமாக ஒரே புத்தகமாக அச்சிட பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது

மேலும் சமூக அறிவியல் பாடத்தில் உள்ள 20 பாடங்கள் அப்படியே இருக்கும் என்றும் ஒவ்வொரு பாடத்தின் முடிவில் இடம்பெற்ற தேவையற்ற கூடுதல் பயிற்சி வினாக்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் எப்போதும்போல் இருக்கும் என்பதும், பாடங்கள் குறைக்கப்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது

From around the web