அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவிற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லை: ஏன் தெரியுமா

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்வரும் திங்கட்கிழமை பதவி ஏற்க உள்ளார் என்பது தெரிந்ததே இந்த நிலையில் இந்த பதவியேற்பு விழாவிற்கு முக ஸ்டாலின், கமலஹாசன், மம்தா பானர்ஜி உள்பட எந்த தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிகிறது இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் சற்று முன் அளித்த போட்டியின்போது ’அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவிற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் உள்பட யாருக்கும்
 
அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவிற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லை: ஏன் தெரியுமா

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்வரும் திங்கட்கிழமை பதவி ஏற்க உள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த பதவியேற்பு விழாவிற்கு முக ஸ்டாலின், கமலஹாசன், மம்தா பானர்ஜி உள்பட எந்த தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிகிறது

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் சற்று முன் அளித்த போட்டியின்போது ’அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவிற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் உள்பட யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் மக்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

மக்களின் முதல்வராக பதவியேற்கவிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மக்கள் முன்னிலையில் பதவியேற்கவிருப்பதாக டெல்லி மக்கள் பெருமையுடன் கூறி வருகின்றனர்.

From around the web