இணைய வசதி இல்லை, பயிற்சி வகுப்பு இல்லை: ஜே.ஈ.ஈ தேர்வில் சாதனை

 

இணைய வசதி இல்லாமலும் எந்தவித பயிற்சி வகுப்புக்கு செல்லாமலும் பழங்குடி இன மாணவி ஒருவர் ஜே.ஈ.ஈ தேர்வில் வெற்றி பெற்றதோடு மட்டுமன்றி 89.11 சதவீத மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்துள்ளார் 


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மாஞ்சேரியல் கோல்லப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி மமதா சமீபத்தில் ஜே.ஈ.ஈ தேர்வு எழுதினார் என்பதும் இந்த தேர்வின் ரிசல்ட் சமீபத்தில் வந்த நிலையில் ஜே.ஈ.ஈ மெயின் தேர்வில் மாணவி மமதா, 89.11 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தனது குடும்பத்தில் முதல் முதலாக கல்வி பயில்வதற்கு தான் வந்துள்ளதாகவும், நான் 90 சதவீத மதிப்பெண் வரை எதிர்பார்த்தேன் என்றும் மமதா பேட்டியில் கூறியுள்ளார். மேலும் எனது பெற்றோருக்கு கல்வி கிடைக்க வில்லை என்பதால், என்னை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள் என்றும் அதனால் நான் தினமும் 8 மணி நேரம் செலவு செய்து ஜே.ஈ.ஈ தேர்வுக்காக படித்தேன் என்றும் எனது உழைப்பிற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது என்றும் கூறினார் 

மமதாவின் பேராசிரியர் இதுகுறித்து கூறும்போது ’கடந்த நான்கு மாதங்களாக அவர் எங்களுடன் தொடர்பு இல்லை. அவரிடம் செல்போன் இல்லாததால் அவரை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருக்கு ஆன்லைன் மூலம் எங்களால் பயிற்சி அளிக்கவும் முடியவில்லை. மேலும் 15 நாட்களுக்கு முன்பு தான் அவரை கல்லூரிக்கு வரவழைத்து பயிற்சி அளித்தோம் என்று கூறியுள்ளார் 
இணைய வசதி இல்லாமல் பயிற்சி வகுப்புக்கு செல்லாமல் பழங்குடி மாணவி ஒருவர் ஜே.ஈ.ஈ தேர்வில் 89.11 சதவீத மதிப்பெண் எடுத்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web