சென்னையில் முழு ஊரடங்கா? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அப்படி ஒரு திட்டம் எதுவும் இல்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விளக்கம் அளித்துள்ளது சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து இன்று மதியத்திற்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது என்பது தெரிந்ததே இந்த நிலையில் சற்று முன்னர் நீதிமன்றத்தில் ஆஜரான தமிழக அரசின் வழக்கறிஞர் சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும்
 

சென்னையில் முழு ஊரடங்கா? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அப்படி ஒரு திட்டம் எதுவும் இல்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விளக்கம் அளித்துள்ளது

சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து இன்று மதியத்திற்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன்னர் நீதிமன்றத்தில் ஆஜரான தமிழக அரசின் வழக்கறிஞர் சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை என்றும் கூறினார்

மேலும் தமிழகத்தில் கொரோனா நிலைமை குறித்து அரசின் குழு ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்

மேலும் இபாஸ் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து வெளியே செல்பவர்கள் யாரும் தடுத்து நிறுத்தப்படவில்லை என்றும் இபாஸ் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

From around the web