இபாஸ் ரத்தாகிறதா? மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்

மாநிலங்களுக்குள்ளூம், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்லவும் இபாஸ் தேவையில்லை என மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் செய்வதற்கும் நிபந்தனைகள் உள்ளன. இபாஸ் இருந்தால் மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியும் என்றும் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வேண்டும் என்றும் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் கட்டுப்பாடு உள்ளது இதனால் மாநிலங்களுக்கு இடையிலான
 

இபாஸ் ரத்தாகிறதா? மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்

மாநிலங்களுக்குள்ளூம், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்லவும் இபாஸ் தேவையில்லை என மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் செய்வதற்கும் நிபந்தனைகள் உள்ளன. இபாஸ் இருந்தால் மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியும் என்றும் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வேண்டும் என்றும் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் கட்டுப்பாடு உள்ளது

இதனால் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை போடுவதாக பிரச்சினைகள் எழுந்தன. இந்த நிலையில் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை வேண்டாம் என்றும் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது

மாநிலங்களிலும் மாநிலங்களுக்கு வெளியையும் செல்ல தடை தேவையில்லை என்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகளினால் சரக்கு போக்குவரத்து தடைபடுவதாகவும் மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. மேலும் வேலைவாய்ப்பு தடைப்பட்டு பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநில அரசின் கட்டுப்பாடுகள் மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு முரணானது என்றும் தலைமைச் செயலர்களுக்கு உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள அந்த கடிதத்தில் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web