மார்ச் 31 வரை புதிய டிரைவிங் லைசன்ஸ் கிடையாது: அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 31ம் தேதி வரை புதிய டிரைவிங் லைசன்ஸ் வழங்கப்படாது என்றும் அதன் பின்னரே நிலைமையைப் பொறுத்து இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது மேலும் கொரோனா வைரஸ் காரணமாக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு கொரோனா தாக்காத வகையில் அவ்வப்போது கைகளை கழுவ சானிடரி வழங்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது மேலும் குளிர்சாதன பேருந்துகளில் இருக்கும்
 
மார்ச் 31 வரை புதிய டிரைவிங் லைசன்ஸ் கிடையாது: அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 31ம் தேதி வரை புதிய டிரைவிங் லைசன்ஸ் வழங்கப்படாது என்றும் அதன் பின்னரே நிலைமையைப் பொறுத்து இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

மேலும் கொரோனா வைரஸ் காரணமாக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு கொரோனா தாக்காத வகையில் அவ்வப்போது கைகளை கழுவ சானிடரி வழங்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது

மேலும் குளிர்சாதன பேருந்துகளில் இருக்கும் திரைசீலைகள் அனைத்தும் அகற்றப்படும் என்றும் பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு போர்வைகள் வழங்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோக்கள் கால் டாக்சிகள் போன்ற வாகனங்களை அவ்வப்போது தூய்மை பணிகள் செய்யவேண்டும் என்றும் இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆட்டோ மற்றும் கால்டாக்சி டிரைவர்களுக்கு அவ்வப்போது அறிவுறுத்த வேண்டும் என்றும் அமைச்சர் எம் எஸ் பாஸ்கர் தெரிவித்துள்ளார்

From around the web