சீன நிறுவனங்களுக்கு இனி அனுமதியில்லை: மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு

இந்திய சீன எல்லையான கான்வால் என்ற பள்ளத்தாக்கில் இந்திய சீன ராணுவ வீரர்களுக்கு இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர் என்பது தெரிந்ததே இதனை அடுத்து சீனாவின் அராஜகத்தை கண்டித்து இந்தியாவில் சீனாவுக்கு எதிராக கோஷங்கள் எழுந்தன. குறிப்பாக சீன நாட்டில் தயாராகும் செயலிகள் எதையும் பயன்படுத்தக்கூடாது என்றும் சீனாவின் தயாராகும் மொபைல் போன்கள் உட்பட எந்த பொருளையும் இந்தியர்கள் வாங்க கூடாது என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அது
 

சீன நிறுவனங்களுக்கு இனி அனுமதியில்லை: மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு

இந்திய சீன எல்லையான கான்வால் என்ற பள்ளத்தாக்கில் இந்திய சீன ராணுவ வீரர்களுக்கு இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர் என்பது தெரிந்ததே

இதனை அடுத்து சீனாவின் அராஜகத்தை கண்டித்து இந்தியாவில் சீனாவுக்கு எதிராக கோஷங்கள் எழுந்தன. குறிப்பாக சீன நாட்டில் தயாராகும் செயலிகள் எதையும் பயன்படுத்தக்கூடாது என்றும் சீனாவின் தயாராகும் மொபைல் போன்கள் உட்பட எந்த பொருளையும் இந்தியர்கள் வாங்க கூடாது என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அது மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் சீன பொருள்களை சாலையில் போட்டு உடைத்து தீ வைத்து எரித்தும் பல சம்பவங்கள் அவ்வப்போது நடந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு அதிரடியாக சமீபத்தில் சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதித்தது. டிக் டாக் ஷேர்இட், ஹலோ உட்பட பல சீன செயலிகளுக்கு இந்தியாவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருந்தபோதிலும் பொதுமக்கள் அனைவரும் இந்த தடைக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் தற்போது அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நெடுஞ்சாலை பணிகளில் பங்கேற்க இனிமேல் சீன நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்று அவர் அறிவித்துள்ளார்

கூட்டு திட்டமாக இருந்தாலும் இனிமேல் நெடுஞ்சாலை பணிகளில் சீன நிறுவனங்களில் சேர்ந்த எந்த நிறுவனத்துக்கும் அனுமதி இல்லை என நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web