திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை: கடம்பூர் செ.ராஜு

கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வந்தாலும் கொரோனா வைரஸால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டு கிட்டத்தட்ட தமிழகம் உள்பட நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என்று கூறலாம் இந்த நிலையில் திரையரங்குகள் திறப்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் சற்று முன் அளித்த பேட்டியில் கூறியதாவது: மக்கள் அதிக அளவில் கூடுவர் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை கொரோனா வைரஸ் குறைந்து இயல்பு நிலை திரும்பிய
 

திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை: கடம்பூர் செ.ராஜு

கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வந்தாலும் கொரோனா வைரஸால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டு கிட்டத்தட்ட தமிழகம் உள்பட நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என்று கூறலாம்

இந்த நிலையில் திரையரங்குகள் திறப்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் சற்று முன் அளித்த பேட்டியில் கூறியதாவது: மக்கள் அதிக அளவில் கூடுவர் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை

கொரோனா வைரஸ் குறைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னரே தியேட்டர்கள் திறக்க வாய்ப்பு என்று கூறினார் மேலும் ஓடிடியில் திரைப்படம் வெளியாவதை தடுக்க சட்டம் எதுவும் கிடையாது என்றும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்பவர்கள் தாராளமாக ரிலீஸ் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களின் இந்த பேட்டி திரையரங்கு உரிமையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியான தகவலாக உள்ளது. திரையரங்குகள் திறக்க டிசம்பருக்கும் மேல் ஆகலாம் என்று கூறப்படுவதால் ‘மாஸ்டர்; உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களும் ஓடிடி பக்கம் சென்றாக வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது

From around the web