இந்த கல்வி ஆண்டே போச்சா? மத்திய உயர்கல்வித் துறை செயலரின் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கவில்லை என்பதும் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் பள்ளிகள் திறக்க மத்திய மாநில அரசுகள் ஆலோசனை செய்து வந்தாலும் இது குறித்த இறுதியான முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் மத்திய உயர்கல்வித் துறை செயலர் அமித் காரே அவர்கள் சற்று முன் அளித்த பேட்டியின் போது ’இந்த ஆண்டு டிசம்பர்
 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கவில்லை என்பதும் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பள்ளிகள் திறக்க மத்திய மாநில அரசுகள் ஆலோசனை செய்து வந்தாலும் இது குறித்த இறுதியான முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் மத்திய உயர்கல்வித் துறை செயலர் அமித் காரே அவர்கள் சற்று முன் அளித்த பேட்டியின் போது ’இந்த ஆண்டு டிசம்பர் வரை பள்ளி கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வுகள் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் வரை பள்ளி கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என்றால் இந்த ஆண்டே வீணாகி விடுமோ என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது

டிசம்பருக்கு பின்னரும் ஒருவேளை பள்ளி கல்லூரிகள் திறக்கவில்லை என்றால் ஒரு முழு கல்வி ஆண்டு மாணவர்களுக்கு பாதிப்பு என்பது கூடுதல் அதிர்ச்சி தரக்கூடிய ஒரு தகவலாகும்

From around the web