தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாது: முதலமைச்சர் பழனிசாமி

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் இருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் வருடம் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதியாண்டு தேர்வுகளை நடத்த வேண்டுமென சமீபத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்கள் அறிவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து தேர்வு நடத்தும் தேதியை
 
விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் – மகிழ்ச்சியில் மக்கள்

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாது: முதலமைச்சர் பழனிசாமி

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் இருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் வருடம் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதியாண்டு தேர்வுகளை நடத்த வேண்டுமென சமீபத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்கள் அறிவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து தேர்வு நடத்தும் தேதியை யுஜிசி ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்பட்டது. தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் செப்டம்பருக்குள் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளது என்றும் கல்லூரிகள், விடுதிகள் கொரோனா மையங்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில் செப்டம்பருக்குள் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை நடத்துவதா இல்லையா என்ற முடிவை எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

இதனை அடுத்து தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது

From around the web