இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என 31 மாணவர்கள் பதிவு செய்த வழக்கின் தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் வெளியாக உள்ளதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம் இந்த நிலையில் சற்று முன்னர் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை நடத்தலாம் என்றும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற வைக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்றும் யூஜிசியிடம் தேர்வு நடத்த காலக்கெடுவை நீட்டிக்க மாநிலங்கள்
 

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என 31 மாணவர்கள் பதிவு செய்த வழக்கின் தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் வெளியாக உள்ளதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை நடத்தலாம் என்றும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற வைக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்றும் யூஜிசியிடம் தேர்வு நடத்த காலக்கெடுவை நீட்டிக்க மாநிலங்கள் கோரலாம் என்றும் ஆனால் மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற வைக்க கோரிக்கை வைக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

முன்னதாக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை தவிர மற்ற மாணவர்கள் தேர்வு எழுத வேண்டாம் என்ற மாநில அரசின் முடிவுகளை யுஜிசி செய்து ஏற்றுக் கொண்டது. ஆனால் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு மட்டும் நடத்தியே தீரவேண்டும் என்று யுஜிசி உறுதியாக இருந்தது என்பதும் யுஜிசியின் முடிவே தற்போது சுப்ரீம் கோர்ட்டின் முடிவாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web