பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு ரத்தா? பிரமாண பத்திரம் தாக்கல் செய்த யூஜிசி

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிகளில் கிட்டத்தட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட உறுப்பு கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்துள்ளார். ஆனால் இறுதி ஆண்டு படிக்கும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும், முதுநிலை படிக்கும்
 

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு ரத்தா? பிரமாண பத்திரம் தாக்கல் செய்த யூஜிசி

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பள்ளிகளில் கிட்டத்தட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட உறுப்பு கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்துள்ளார். ஆனால் இறுதி ஆண்டு படிக்கும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும், முதுநிலை படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களும், பொறியியல் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களும் செமஸ்டர் தேர்வுகளை எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் இறுதியாண்டு தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய விசாரணையின்போது பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இதுகுறித்து பிரமாண பத்திரம் ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது

அதில் பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இறுதியாண்டு தேர்வு ரத்து இல்லை என்பதே பல்கலைக்கழக மானியக் குழுவின் முடிவாக இருக்கும் நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web