நீட் தேர்வுக்கு தடையா? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு

மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வான நீட் நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம் இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரணை செய்யவுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக வேலூர் மருத்துவக் கல்லூரி உள்பட தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் நேற்று விசாரணை செய்தபோது நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி அருண் மிஸ்ரா பெஞ்ச் தெரிவித்தது. மேலும் இந்த வழக்கில் இன்றும் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய விசாரணையின்போது வேறு சில
 

நீட் தேர்வுக்கு தடையா? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தர்வு

மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வான நீட் நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம் இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரணை செய்யவுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக வேலூர் மருத்துவக் கல்லூரி உள்பட தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் நேற்று விசாரணை செய்தபோது நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி அருண் மிஸ்ரா பெஞ்ச் தெரிவித்தது.

மேலும் இந்த வழக்கில் இன்றும் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய விசாரணையின்போது வேறு சில புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web