மணல் கடத்தல் வழக்கில் சிக்கினால் ஜாமின் இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் மணல் கடத்தல் கடந்த சில வருடங்களாக மிக வேகமாக நடந்து வந்தது. மணல் கடத்தலை தடுக்கும் அதிகாரிகள் கொலை ய்யப்பட்ட சம்பவங்களும் நடந்து வந்ததால் இது குறித்த வழக்குகள் சீரியசாக பார்க்கப்பட்டன 

இந்த நிலையில் மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கினால் முன் ஜாமீன் கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கிய 40 பேரின் மனுக்கள் முன் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இனிமேல் மணல் கடத்தல் வழக்குகளில் போருக்கு முன் ஜாமீன் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மணல் கடத்தலால் நிலத்தடி நீர் வெகுவாக குறைவதாகவும், நீர் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் இதனால் இந்த வழக்கில் சிக்கியிருக்கும் யாருக்கும் இனி முன் ஜாமீன் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

From around the web