நடவடிக்கை எடுக்கப்படவில்லை; என்ன திட்டம் உள்ளது? மத்திய அரசுக்கு கடும் கண்டனம்!

கொரோனாவின் மோசமான சூழலை எதிர் கொள்ள மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்று கேள்வி எழுப்பி உள்ளது உயர்நீதிமன்றம்!
 
நடவடிக்கை எடுக்கப்படவில்லை; என்ன திட்டம் உள்ளது? மத்திய அரசுக்கு கடும் கண்டனம்!

தற்போது மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோயாக கொரோனா காணப்படுகிறது. மத்திய அரசின் சார்பில் பல்வேறு மாநிலங்களுக்கும் தடுப்பூசிகளும் கொடுக்கப்படுகின்றன. இந்நிலையில் பல பகுதிகளில் இந்த கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு அதிகமாக நிகழ்கிறது. மேலும் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிசன் பற்றாக்குறை தற்போது அதிகரித்துள்ளது. இதனால் பல பகுதிகளில் ஆக்சிசன் பற்றாக்குறையால் உயிரிழப்பும் தொடர்ந்து நிகழ்கிறது.highcourt

மேலும் குறிப்பாக இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆக்சிசன் பற்றாக்குறையினால் தினம்தோறும் அதிகப்படியான உயிரிழப்புகள் நிகழ்ந்து நம் கண்முன்னே தெரிகிறது. மத்திய அரசின் சார்பில் ஆக்சிசன் உற்பத்தி தற்போது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசு தற்போது கண்டனம் தெரிவிக்கும் விதமாக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இதனை டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன்படி மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள ஆக்சிசன் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் கொரோனா மோசமான சூழலை எதிர்கொள்ள மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது? என்றும் கேட்டுள்ளது. மேலும் ஆக்சிசன் இன்றி மக்கள் உயிர் இழப்பதை வேடிக்கை பார்க்க முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் டெல்லி மருத்துவமனைகளில்ஆக்சிசன் சென்று சேர்வதை உறுதி செய்ய அதிகாரிகளை நியமிக்க வேண்டுமென்றும் டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டனத்தோடு தெரிவித்துள்ளது.

From around the web