மகாராஷ்டிராவினை தாக்கவுள்ள நிசார்கா புயல்!!

உலக சுகாதார மையம் கொரோனாத் தொற்றால் அதிக அளவில் பாதிப்பிற்குள்ளான நாடுகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியா 10 வது இடத்தினைப் பெற்றுள்ளது. அதிலும் இந்தியாவில் அதிக பாதிப்பினைக் கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகின்றது. இந்தியாவில் 40 சதவீத அளவு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையானது மகாராஷ்டிராவிலே உள்ளது. மேலும் இந்தியாவில் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பயிர்களை தின்று சேதம் விளைவித்து வருகின்ற வெட்டுக்கிளிகள், இந்த 3 மாநிலங்களைத் தாண்டி
 
மகாராஷ்டிராவினை தாக்கவுள்ள நிசார்கா புயல்!!

உலக சுகாதார மையம் கொரோனாத் தொற்றால் அதிக அளவில் பாதிப்பிற்குள்ளான நாடுகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியா 10 வது இடத்தினைப் பெற்றுள்ளது. அதிலும் இந்தியாவில் அதிக பாதிப்பினைக் கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகின்றது.

இந்தியாவில் 40 சதவீத அளவு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையானது மகாராஷ்டிராவிலே உள்ளது. மேலும் இந்தியாவில் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பயிர்களை தின்று சேதம் விளைவித்து வருகின்ற  வெட்டுக்கிளிகள், இந்த 3 மாநிலங்களைத் தாண்டி மகாராஷ்டிராவில் உட்புகுந்து தங்களது வேலையினைக் காண்பித்து வருகின்றன.

மகாராஷ்டிராவினை தாக்கவுள்ள நிசார்கா  புயல்!!

இந்தநிலையில் மகாராஷ்டிராவினை நோக்கி மற்றொரு பிரச்சினை படையெடுத்து வருகிறது. அதாவது தென்மேற்கு பருவமழை இன்று கேரளாவில் தொடங்கி கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்தப் புயல் இன்னும் 2 நாட்களில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தை தாக்கும் என தேசிய பேரிடர் மேலாண்மை அறிவுறுத்தியுள்ளது. மேலும் அதன்படி மகாராஷ்டிராவில் 9 தேசிய பேரிடர் மீட்புப்படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரவுள்ள புயலுக்கு நிசார்கா  என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web