பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணையை மேற்கொண்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடைய ஜாமீன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்தது. இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சாட்சியங்களை அழிக்க முயற்சிக்க கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும்
 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணையை மேற்கொண்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடைய ஜாமீன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்தது. இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன்


சாட்சியங்களை அழிக்க முயற்சிக்க கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் முருகன், கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்கிய நிலையில், நிர்மலா தேவிக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.


வழக்கிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மீடியாக்களுக்கு பேட்டி அளிக்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது

From around the web