தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நிதியமைச்சர்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்!

பிரதமர் மோடி தலைமையில், பாஜக ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காரணத்தினால் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை. அவருக்கு பதிலாக பியூஸ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். உடல்நலக் குறைவால், இம்முறை தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று அருண் ஜெட்லி கூறியதை அடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதியமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த
 
தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நிதியமைச்சர்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்!

பிரதமர் மோடி தலைமையில், பாஜக ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காரணத்தினால் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை. அவருக்கு பதிலாக பியூஸ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

உடல்நலக் குறைவால், இம்முறை தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று அருண் ஜெட்லி கூறியதை அடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதியமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இவர் கடந்த பாஜக ஆட்சியில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இருந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் 6வது நபர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். 

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நிதியமைச்சர்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்!

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை அப்போதைய நிதியமைச்சராக இருந்த தமிழகத்தைச் சார்ந்த ஆர்.கே.சண்முகம் தான் தாக்கல் செய்துள்ளார். இவர் நேரு அமைச்சரவையில் 1957, 1958, 1964, 1965 ஆகிய ஆண்டுகளில் நிதி அமைச்சராக இருந்துள்ளார். 

இவரைத் தொடர்ந்து, 1975ல் இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சி சுப்பிரமணியம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் 1980, 1981 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தை சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். 

1997ல் மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்தார். இவர்களைத் தொடர்ந்து தற்போது நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து, தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளார். இவர் தான் நாட்டின் முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,

From around the web