நிர்பயா கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதி அறிவிப்பு: பெரும் பரபரப்பு

நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 4 குற்றவாளிகளுக்கு வரும் 22ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து பேருந்தில் இருந்து தூக்கி எறிந்தனர். இதனால் படுகாயமடைந்த நிர்பயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதனை இந்த குற்றத்திற்கு காரணமான ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில்
 
நிர்பயா கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதி அறிவிப்பு: பெரும் பரபரப்பு

நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 4 குற்றவாளிகளுக்கு வரும் 22ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து பேருந்தில் இருந்து தூக்கி எறிந்தனர். இதனால் படுகாயமடைந்த நிர்பயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இதனை இந்த குற்றத்திற்கு காரணமான ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் ஒருவர் சிறுவர் என்பதால் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டு விடுதலையானார்.

அதேபோல் ராம்சிங் என்பவர் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் மீதியுள்ள முகேஷ், வினய், அக்ஷய், பவன் ஆகிய நால்வருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இந்த தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்தது

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு நால்வரும் தூக்கிலிடப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web