கொரோனாவுக்கு பலியான 9 மாத குழந்தை: அதிர்ச்சியில் பெற்றோர்கள்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அனைத்து மாநில சுகாதார அமைச்சகங்கள் எச்சரித்து வருகின்றன இந்த நிலையில் புதுவையில் உடல்நலக்குறைவு காரணமாக குழந்தை ஒன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை இறந்தது. இதனையடுத்து அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்த போது கொரோனா பாசிட்டிவ் உறுதியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது இதனை அடுத்து
 

கொரோனாவுக்கு பலியான 9 மாத குழந்தை: அதிர்ச்சியில் பெற்றோர்கள்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அனைத்து மாநில சுகாதார அமைச்சகங்கள் எச்சரித்து வருகின்றன

இந்த நிலையில் புதுவையில் உடல்நலக்குறைவு காரணமாக குழந்தை ஒன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை இறந்தது. இதனையடுத்து அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்த போது கொரோனா பாசிட்டிவ் உறுதியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

இதனை அடுத்து அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 9 மாத குழந்தை ஒன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் புதுவையில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும், குடும்பத்தார்கள் குழந்தைகளையும், முதியவர்களையும் பாதுகாப்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

புதுவையில் இதுவரை 1,596 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இந்த குழந்தையுடன் கொரோனாவுக்கு 22 உயிர்கள் பலியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web