தற்போது தமிழகத்தில் முதல் இடத்தில் உள்ளது நீலகிரி!எதில் முதலிடம்?

கொரோனா தடுப்பு ஊசி போடுவதால் தமிழகத்தில் முதல் இடத்தில் உள்ளது நீலகிரி மாவட்டம்!
 
தற்போது தமிழகத்தில் முதல் இடத்தில் உள்ளது நீலகிரி!எதில் முதலிடம்?

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பதற்கேற்ப நம் தாய்த்திரு நாடு தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் வளங்களும் வனங்களும் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழகத்தில் சில தினங்களாக ஆட்கொல்லி நோயான கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் குறிப்பாக சென்னையில் இந்த நோயின் தாக்கம் ஆனது நாளுக்கு நாள் ஆயிரத்தை கடந்து அங்குள்ள மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.covid19

குறிப்பாக சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் கோயம்புத்தூர் மாவட்டத்திலும் திருநெல்வேலி திருச்சி போன்ற மாவட்டங்களிலும் இந்நோயின் தாக்கமானது அதிகமாக காணப்படுகிறது. மேலும் இதற்காக தமிழகத்தின் சார்பில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசானது பல்வேறு அரசு மருத்துவனைக்கு கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வருகின்றன. மேலும் ஒரு சில பகுதிகளில் இந்த தடுப்பூசியின் தட்டுப்பாடு அதிகம் காணப்படுகிறது. மேலும் பல பகுதிகளில் மக்கள் இந்த தடுப்பூசிக்கு அச்சத்தையே தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக தமிழகத்தில் இந்த தடுப்பூசி மீது மிகுந்த அச்சம் நிலவுகிறது. இதனால் மக்களும் பல தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்வதில் முதலிடத்தில் உள்ளது நீலகிரி மாவட்டம். மேலும் நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 48 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார் சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாலுசாமி. மேலும் பல மாவட்டங்களிலும் இதுபோன்ற தடுப்பூசி போடப்படுகின்றன. ஆயினும் இந்த நீலகிரி மாவட்டம் ஆனது தற்போது தமிழகத்தில் அதிகம் கொரோனா  தடுப்பூசி போடப்பட்ட மாவட்டமாக காணப்படுவது பெருமை அளிக்கிறது.

From around the web