இரவு நேர ஊரடங்கு! 200 இடங்களில் சோதனை!சென்னையில் தீவிர நடவடிக்கை!

சென்னையில் இரவு நேர ஊரடங்கு போது 200 இடங்களில் வாகன சோதனை நடக்கும் என்று கூறுகிறார் காவல் ஆணையர் மகேஷ்குமார்!
 
இரவு நேர ஊரடங்கு! 200 இடங்களில் சோதனை!சென்னையில் தீவிர நடவடிக்கை!

மக்கள் மத்தியில் தற்போது ஆட்கொல்லி நோயாக காணப்படுகிறது  கொரோனா. கண்ணுக்கே தெரியாமல் மனிதனின் உடலுக்குள் சென்று மனிதனின் உடம்பை நாசம் செய்து அதன் பின்னர் அவனை மரணத்திற்கு தள்ளுகிறது. அப்பேர்ப்பட்ட கொரோனா முதலில் நமது நட்பு நாடான சீனாவில் கண்டறியப்பட்டது. உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா இருந்தது தெரியவந்தது. இந்தியாவின் மிகப்பெரிய முயற்சியான முழு ஊரடங்கு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பின்னர் இந்நோயானது கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

corona

 சில தினங்களாக கொரோனா நோயின் தாக்கம் ஆனது மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் உள்ள உத்திரபிரதேசம் டெல்லி  தமிழகம் போன்ற மாநிலங்களில்  கொரோனா தாக்கமானது மீண்டும் அதிகரித்துள்ளது .இதனால் மாநில அரசுகள் பல்வேறு விதிகளை விதித்துள்ளனர். அதன்படி தமிழக அரசின் சார்பில் சில கட்டுப்பாட்டு விதிகள் தடைகளும் முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளன. நாளைய தினம் முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் சில கட்டுப்பாட்டு விதிகளையும் சில நடைமுறைகளையும் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அறிவித்துள்ளார். அதன்படி சென்னையில் இரவு நேரங்களில் 200 இடங்களில்  வாகன சோதனை நடக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் ஞாயிற்று கிழமைகளிலும் 200 இடங்களில் வாகன சோதனை நடைபெற உள்ளதாகவும் காவல் ஆணையர் மகேஷ் குமார் கூறினார். மேலும் இரவு நேர ஊரடங்கு போது பொதுமக்களை கொரோனா விதிகளை பின்பற்ற வைப்போம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

From around the web