குஜராத்தில் 4 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்

 

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் அதிகரித்து வருவது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு அந்த ஆண்டு முழுவதுமே மக்களை வாட்டி எடுத்தது 

முழு ஊரடங்கு என்ற காரணத்தினால் கோடிக்கணக்கான மக்கள் அவதி அடைந்தனர். தற்போதுதான் ஓரளவுக்கு ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

gujarat lockdown

ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் சற்றுமுன் வந்த தகவலின் படி குஜராத்தில் உள்ள நான்கு நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது

அகமதாபாத், சூரத், வதோதரா மற்றும் ராஜ்கோட் ஆகிய நான்கு நகரங்களில் நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாக குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web