இரவு நேர ஊரடங்கு ;15 கோடி ரூபாய் இழப்பு!சரியும் போக்குவரத்து வருவாய்!

இரவு நேர ஊரடங்கு அரசு பஸ்கள் இயக்கப்படாததால் 12 முதல் 15 கோடி ரூபாய் வருவாய் இழக்கப்பட்டதாக தகவல்!
 
இரவு நேர ஊரடங்கு ;15 கோடி ரூபாய் இழப்பு!சரியும் போக்குவரத்து வருவாய்!

மக்கள் மத்தியில் தற்போது ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது .பல்வேறு மாநிலங்கள் பல்வேறு சட்டங்களையும் பல்வேறு விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டன. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் மீண்டும் கொரோனா தாக்கம்  அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் குறிப்பாக டெல்லி மும்பை சென்னை போன்ற மாநகரங்களில் கொரோனா தாக்கம் தினம் தினம் அதிகரிப்பு ஏற்படுகிறது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன.

bus

மேலும் ஒரு சில மாநிலங்களில் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன நிலையில் நேற்றைய தினம் தமிழக அரசின் சார்பில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இரவு நேர ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் நேற்று இரவு வாகன போக்குவரத்து நடைபெறவில்லை. மேலும் நேற்றைய தினம் காலையில் போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆயினும் பயணிகளின் வரத்து குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் தற்போது போக்குவரத்து துறை சார்பில் சில தகவல்கள் கூறப்படுகிறது.

 அதன்படி நேற்று இரவில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை இதனால் 12 முதல் 15 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக போக்குவரத்து துறை சார்பில் கூறப்படுகிறது. மேலும் நேற்று பகலில் மட்டும் 16 ஆயிரம் பேர் மட்டுமே இயக்கப்பட்டன என்று அரசு போக்குவரத்து துறை செயலாளர் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். இதனால் இந்த இரவு நேர ஊரடங்கு காரணமாக கொரோனா கட்டுப்பாடு மட்டுமின்றி பொருளாதாரமும் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகிறது  தெரியவந்துள்ளது.

From around the web