அண்டை மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு: தமிழகத்திலும் அமல்படுத்தப்படுமா?

 

கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் இருந்து வரும் நிலையில் இங்கிலாந்து நாட்டில் தற்போது புதிய வகை வைரஸ் பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த குறிப்பாக சென்னை வந்த ஒருவருக்கும் கொல்கத்தா வந்த இருவருக்கும் புதிய வகை வைரஸ் தொற்றினால் அறிகுறி இருப்பதாகவும் இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது 

lockdown

இந்த நிலையில் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால் மும்பை உள்பட மகாராஷ்டிர மாநில மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய உருமாறிய கொரோனா பரவுவதால் இரவு நேர ஊரடங்கு என்று முதல்வர் எடியூரப்பா விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்கவும் எடியூரப்பா அறிவுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web