இரவு நேர ஊரடங்கு ஆனால் ஆம்னி பேருந்துகள் நிறுத்தவில்லை!நஷ்டத்தில் தான் பேருந்துகள் இயங்குகிறது!

இரவுநேர ஊரடங்கினால் ஆம்னி பேருந்து சேவையை நிறுத்த வில்லை என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது!
 
இரவு நேர ஊரடங்கு ஆனால் ஆம்னி பேருந்துகள் நிறுத்தவில்லை!நஷ்டத்தில் தான் பேருந்துகள் இயங்குகிறது!

கடந்த ஆண்டு அனைவருக்கும் மிகுந்த சோகத்தினை தந்தது என்று கூறலாம். மேலும் கடந்த ஆண்டில் ஆரம்பம் முதலே இந்தியாவில் முழு  ஊரடங்கு  காணப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு இறுதியில் தான் இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு காணப்பட்ட நிலையில் தற்போது பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.காரணம் என்னவெனில் கடந்த ஆண்டில் ஊரடங்கு ஆனது ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் போடப்பட்டது இந்நிலையில் தற்போது இந்த இந்த ஆட் கொல்லியான கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளதால் ஒரு சில மாநிலங்களில் முழு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளன.

omni bus

மேலும் இன்றைய தினம் ஜார்கண்ட் அரசாங்கம் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல் படுத்த உள்ளதாக கூறியுள்ள நிலையில் தமிழகத்திலும் இந்த நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.தமிழக  அரசினால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு நடைமுறை உள்ளது .இதற்காக முன்னேற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் போக்குவரத்து கழகமானது தங்களது இரவு நேர பயணங்களை மாற்றி அமைத்துள்ளது.

 தமிழகத்தில் இரவு நேரங்களில் வாகனங்கள் ஓடாது என்றும் கூறியிருந்தது. தற்போது தமிழகத்தில்அரசு பஸ் இணையாக தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தற்பொழுது கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஆம்னி பேருந்து சேவையை நிறுத்தவில்லை என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் கூறியுள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு காரணமாக பகலில் 400 முதல் 500 பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் கூறியுள்ளது. இதனை தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் அப்சல் சென்னையில் பேட்டியளித்துள்ளார். மேலும்டீசல் விற்கும் விலையில் நஷ்டத்தில் தான் பேருந்துகளை இயக்கி வருகிறோம் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் அப்சல் பேட்டியளித்துள்ளார்.

From around the web