புனேவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஓட்டல், பார்களை மூட உத்தரவு!

 
புனேவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஓட்டல், பார்களை மூட உத்தரவு!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே நகரில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல் என்றும் பார்கள், ஹோட்டல்கள், உணவகங்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியாவில் உருவாகும் கொரோனா வைரஸ் பாதிப்பில் 50 சதவீதத்துக்கு மேல் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஏற்கனவே அங்கு உள்ள சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புனே நகரில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

lockdown

மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை நாளை முதல் மூடவேண்டும் என்றும் ஹோட்டல்களில் பார்சல் மட்டும் அனுமதி உண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது 

மேலும் திருமணங்கள் மற்றும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் தவிர வேறு எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடையாது என்றும் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புனே நகர சுகாதார துறை தெரிவித்துள்ளார். இதனால் புனே நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web