மீண்டும் இரவுநேர ஊரடங்கு: மத்திய அரசு பரிந்துரையால் பொதுமக்கள் அதிர்ச்சி

 
kerala

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரை செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மூன்றாவது நாளாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தினசரி கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று சுமார் 32,000 பேர் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கேரளாவில் தொடர்ந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு கொரோனா ஏற்பட்டு வரும் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்த மத்திய அரசு, கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது

இதுகுறித்த அறிவிப்பை கேரள அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் சமீபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கேரளா மற்றும் அதிகரித்து வருவதால் அங்கு இரவு நேர ஊரடங்கு குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web