8 மாதங்களில் அடுத்த அலை: மத்திய அரசின் சிறப்பு குழு தகவல்!

 
third wave

இந்தியாவில் கொரோனா வைரஸ் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை காரணமாக பொதுமக்கள் பெரும் பாதிப்பில் உள்ளனர் என்பதும் இலட்சக்கணக்கான உயிர்கள் பலியானதோடு, கோடிக்கணக்கான பணம் நஷ்டம் அடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்தியாவில் மூன்றாவது அலை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தொடங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் விஞ்ஞானிகள் கூறிய நிலையில் தற்போது மத்திய அரசின் சிறப்பு ஆய்வுக்குழு கொரோனா மூன்றாவது அலை இந்தியாவை தாக்க இன்னும் எட்டு மாதங்கள் ஆகும் என தெரிவித்துள்ளது 

அதற்குள் இந்தியாவில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பெரிய பாதிப்பு இருக்காது என்றும் அந்த சிறப்பு குழு தெரிவித்துள்ளது. மூன்றாவது அலைக்கு இன்னும் எட்டு மாதங்கள் ஆகும் என்ற தகவல் தற்போது பொது மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. தற்போது இரண்டாவது அலை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் மூன்றாவது அலைக்குள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் இந்த இயல்பு நிலை தொடரும் என்று கூறப்படுகிறது

From around the web