அடுத்த வைரஸ் ரெடி: மழைக்காலத்தில் வேகமாக பரவுமா?

 
parvo virus

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மிக வேகமாக பரவி வரும் நிலையில் அடுத்த வைரஸ் ஒன்று பரவி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மனிதர்களை கொரோனா வைரஸ் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தாக்கிவரும் நிலையில் தற்போது விலங்குகளுக்கு பார்வோ என்ற வைரஸ் பரவி வருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளுக்கு இந்த வைரஸ் பரவி வருவதாகவும் குறிப்பாக நாய்களுக்கு இந்த வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம் என்றும் மழை காலத்தில் தான் இந்த வைரஸ் மிக அதிகமாகவும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது

எனவே பார்வோ வைரஸிலிருந்து செல்லப்பிராணிகளை பாதுகாத்துக்கொள்ள கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் விலை 300க்கும் மேல் இருக்கும் என்பதால் பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள் தற்போது இந்த தடுப்பூசியை போடாத நிலையில் உள்ளனர்

ஆனால் இந்த தடுப்பூசியை போட்டால்தான் செல்லப்பிராணிகளுக்கு பாதுகாப்பு என்று அரசு அறிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மழைக்காலத்தில் இந்த வைரஸ் செல்லப்பிராணிகளை அதிகம் தாக்கும் என்றும் அதனால் முன்கூட்டியே தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு செல்லப் பிராணிகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி உள்ளது

From around the web