ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: கொரோனாவை கட்டுப்படுத்திய நாடு அழைப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலகின் 200 நாடுகளில் தலைவிரித்து ஆடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் கொரோனா வைரஸ்ஸிடம் இருந்து மீண்ட ஒரே நாடு என்ற பெருமையை சமீபத்தில் பெற்றது நியூசிலாந்து. இந்நாட்டில் மிகக் குறைந்த அளவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த நிலையில் அவர்களும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குணம்
 
ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: கொரோனாவை கட்டுப்படுத்திய நாடு அழைப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலகின் 200 நாடுகளில் தலைவிரித்து ஆடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் கொரோனா வைரஸ்ஸிடம் இருந்து மீண்ட ஒரே நாடு என்ற பெருமையை சமீபத்தில் பெற்றது நியூசிலாந்து. இந்நாட்டில் மிகக் குறைந்த அளவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த நிலையில் அவர்களும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குணம் அடைந்து விட்டதால் தற்போது கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து நாடு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டி மீண்டும் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு கொண்டே வரும் நிலையில் வெளி நாட்டில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது

ஏற்கனவே அரபு நாடுகள் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வரும் நிலையில் தற்போது நியூசிலாந்து நாடு எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று நியூசிலாந்து நாட்டில் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web