பிறந்த குழந்தை விரல் துண்டிப்பு! மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!!

பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
 
baby

தற்போது நம் நாட்டில் மக்களால் அதிகம் நம்பப்படும் ஒரு சேவையாக காணப்படுகிறது. மருத்துவம் ஆனால் பலரும் இதனை சேவையாக எண்ணாமல் தொழிலாகக் கருதி மக்களின் வாழ்க்கையோடு மட்டுமின்றி அவர்களின் உயிரோடு விளையாடுகின்றனர். மேலும் அவர்களின் உயிருக்கு விலை வைப்பது போலவும் இந்த மருத்துவம் தற்போதைய காலத்தில் மாறியுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. சில தினங்களுக்கு முன்பாக சிகிச்சை என்ற பெயரில் பிறந்த பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்டது தமிழகத்தில் காட்டுத்தீயாய் பரவியது.baby

மேலும் அதற்கு எதிராக பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அந்தக் குழந்தையின் விரல்களில் ஊசி குத்திய தாகவும் அதனை எடுக்க முயற்சித்தபோது முடியாததால் விட்டதாகவும் கூறப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. இதற்கு எதிராக தற்போது மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.. அந்தப்படி தஞ்சையில் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் இரண்டு வாரங்களில் விளக்கம் அளிக்க மருத்துவக் கல்வி இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தஞ்சை அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை விரலை செவிலியர் கவனக்குறைவாக பிடித்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் தற்போது உடனடியாக மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி அதற்கு பதில் அளிக்க கால அவகாசம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

From around the web