குழந்தைக்கு புதிய தடுப்பூசி மருந்து: அடுத்த மாதம் சப்ளை!

 
child vaccine

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் இதனை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இயல்பு வாழ்க்கையும் திரும்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

பள்ளிகள் திறக்கப்பட்டு, சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டு அனைத்தும் இயல்புநிலை திரும்பிய நிலையில் மூன்றாவது அலை குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மும்பை மற்றும் நாக்பூர் பகுதிகளில் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ள நிலையில் படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் மூன்றாவது அலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த நிலையில் மூன்றாவது அலையில் குறிப்பாக குழந்தைகளை தாக்கும் என்பதால் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த ஆய்வுகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி சைடுஸ் காடிலா என்ற நிறுவனம் ‘சைகோ வி-டி’ என்ற புதிய மருந்தை உருவாக்கி உள்ளது. இதை குழந்தைகளுக்கு பயன்படுத்த முடியும். மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது.டுத்த மாதம் மத்திய அரசுக்கு அது சப்ளை செய்யப்படும். அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இருக்கிறார்கள்.

From around the web