புதிய வகை உருமாறிய வைரஸ்: காற்றிலும் பரவும் என்பதால் அதிர்ச்சி

 
vietnam virus

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதல் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது என்பதும் அந்த வைரஸ் முதல் அலை என கூறப்பட்டு இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது

அதன் பின்னரும் இந்த வைரஸ் உருமாறி இங்கிலாந்து வைரஸ், இந்தியா வைரஸ் எனவும் கண்டறியப்பட்டன. இந்த வைரஸ் தான் தற்போது இரண்டாவது அலையாக மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வியட்நாமில் மீண்டும் புதிய வகை உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உருமாறிய வைரஸ் இதுவரை சுமார் 7000 பேருக்கு பரவி உள்ளதாகவும் இதனால் 47 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த உருமாறிய வைரஸ் காற்றிலும் பரவக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்து மேலும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web