இந்தியாவில் 20 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸா? அதிர்ச்சி தகவல்!

 

பிரிட்டனில் மிக வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டன் நாட்டில் இருந்து இந்தியா திரும்பிய 20 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த 24 பேரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் இருந்ததாகவும் அவருடன் நெருக்கமாக இருந்த 17 பேரையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த பட்டுள்ளதாகவும் தெரிகிறது

மேலும் கடந்த 7 நாட்களில் பிரிட்டனில் இருந்து வந்த பயணிகளை பரிசோதனை செய்தபோது இதுவரை இருபது பேர்களுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

corona

பிரிட்டனில் இருந்து டெல்லி வந்த ஆறு பேருக்கும் கொல்கத்தா வந்த இருவருக்கும் அகமதாபாத் வந்த நான்கு பேருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதால் அந்நாட்டில் இருந்து இந்தியா வரும் விமான சேவை நேற்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியா வந்தவர்களால் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இருக்க வாய்ப்பு இருப்பது என்பதால் ஆராய்ச்சியாளர்கள் மிகவும் தீவிரமாக உள்ளனர் 

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 2000 பேர் பிரிட்டனில் இருந்து சென்னைக்கு வந்துள்ளனர் என்றும் அவர்களில் யாருக்காவது ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டாலும் அந்த தெருவில் வசிக்கும் அனைவருக்கும் பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web