இன்று முதல் டெபிட் கிரெடிட் கார்டுகளுக்கு புதிய விதிமுறைகள்!

 

நாடு முழுவதும் இன்று முதல் டெபிட் கிரெடிட் கார்டுக்கான புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது 

நாடு முழுவதும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழங்குதல் மற்றும் உபயோகித்தல் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் குறித்து தற்போது பார்ப்போம் 

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள ஏடிஎம் மற்றும் பாயிண்ட் ஆப் ச்ல் இயந்திரங்களில் மட்டுமே உபயோகிக்க முடியும் 

வெளிநாடுகளில் பயன்படுத்த வங்கியின் அனுமதி பெறவேண்டும். பண பரிவர்த்தனை வரம்பை வாடிக்கையாளர்களை அமைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது 

புதிய சேவை தேர்வு செய்வது, விலகுவது, ஆன்லைன் பரிவர்த்தனையில் சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் சர்வதேச பரிவர்த்தனை மற்றும் தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகளுக்கான வரம்புகள் உள்ளிட்டைவைகளும் வாடிக்கையாளர் பதிவு செய்து கொள்ளலாம் 

இந்த புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web