ராமேஸ்வரத்தின் புதிய அடையாளமாகி போன அப்துல் கலாம் நினைவகம்

மறைந்த மேதகு அய்யா அப்துல் கலாம் அவர்கள் அணு விஞ்ஞானியாக இருந்து இந்தியாவின் குடியரசுத்தலைவராக உயர்ந்தவர் 2020ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என இளைஞர்களை தூண்டியவர். இவர் கடந்த 2014ல் மறைந்த பிறகு இவர் சமாதி கொண்டிருக்கும் ராமேஸ்வரம் பேக்கரும்பு என்ற இடம் ராமேஸ்வரம் வரும் பயணிகளுக்கு முக்கிய ஸ்பாட்டாக ஆகி விட்டது. இதற்கு முன்பு இந்த இடம் நெடுஞ்சாலையோரத்தில் இருந்த சாதாரண இடம்தான் அவர் இங்கு புதைக்கப்பட்ட பிறகு மத்திய பாஜக அரசு மிக விரைவாக
 

மறைந்த மேதகு அய்யா அப்துல் கலாம் அவர்கள் அணு விஞ்ஞானியாக இருந்து இந்தியாவின் குடியரசுத்தலைவராக உயர்ந்தவர் 2020ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என இளைஞர்களை தூண்டியவர்.

ராமேஸ்வரத்தின் புதிய அடையாளமாகி போன அப்துல் கலாம் நினைவகம்

இவர் கடந்த 2014ல் மறைந்த பிறகு இவர் சமாதி கொண்டிருக்கும் ராமேஸ்வரம் பேக்கரும்பு என்ற இடம் ராமேஸ்வரம் வரும் பயணிகளுக்கு முக்கிய ஸ்பாட்டாக ஆகி விட்டது.

இதற்கு முன்பு இந்த இடம் நெடுஞ்சாலையோரத்தில் இருந்த சாதாரண இடம்தான் அவர் இங்கு புதைக்கப்பட்ட பிறகு மத்திய பாஜக அரசு மிக விரைவாக செயல்பட்டு மிகப்பெரும் அளவில் ஒரு மணிமண்டபத்தை ஒரு வருடத்துக்குள் கட்டியது. அவரைப்பற்றிய எல்லா விசயத்தையும் அந்த இடத்தில் ஆவணப்படுத்தியது.

இந்திய அளவில் தேசிய புண்ணியஸ்தலமான ராமேஸ்வரத்துக்கும் இங்கிருக்கும் ராமநாதஸ்வாமி கோவிலுக்கும் ஒரு நாளைக்கு அதிக மக்கள் வந்து செல்கின்றனர். முன்பு இது போல கோவிலுக்கு வரும் மக்கள், கோவில், ராமர் பாதம், தனுஷ்கோடி, பாம்பன் பாலம் இவற்றை மட்டுமே பார்வையிடுவர்.

இப்போது இந்த மணிமண்டபத்தையும் அப்துல்கலாமின் மணிமண்டபத்தையும் பார்வையிடாமல் செல்வதில்லை. குழந்தைகளுக்கு அவற்றை காட்டாமல் செல்வதில்லை.

சில வருடங்களாக இந்த இடம் புதிய டூரிஸ்ட் ஸ்பாட்டாகி அதிக ஹோட்டல்கள், டீக்கடைகள், என உணவு சார்ந்த கடைகள் அதிகம் திறக்கப்படுகின்றன.

எந்நேரமும் இந்த இடத்தில் கூட்டம் அலைமோதுகிறது. இராமேஸ்வரம் மதுரை மெயின் சாலையில் இந்த இடம் உள்ளது நீங்களும் இராமேஸ்வரம் சென்றால் இந்த இடத்தை பார்வையிட்டு உங்கள் குழந்தைகளுக்கும் காண்பித்து வாருங்கள். அவரின் பெருமையை உங்கள் குழந்தைகளுக்கு நினைவூட்ட மறவாதீர்கள்

From around the web