சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு புதிய ஆய்வாளர்: லாக்கப் மரணத்திற்கு நீதி கிடைக்குமா?

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் கடை திறந்ததாக குற்றஞ்சாட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் காவல் நிலையத்தில் அவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயத்தால் மரணமடைந்ததாகவும் இந்த மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் மற்றும் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர் இந்த நிலையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்திற்கு காரணமானவர்கள் என்று கூறப்படும்
 

சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு புதிய ஆய்வாளர்: லாக்கப் மரணத்திற்கு நீதி கிடைக்குமா?

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் கடை திறந்ததாக குற்றஞ்சாட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆனால் காவல் நிலையத்தில் அவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயத்தால் மரணமடைந்ததாகவும் இந்த மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் மற்றும் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்

இந்த நிலையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்திற்கு காரணமானவர்கள் என்று கூறப்படும் உதவி ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. அதுமட்டுமின்றி சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரும் இடமாற்றம் செய்யப்பட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் இடமாற்றம் செய்யப்பட்டதால் தற்போது புதிய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பர்னாந்து சேவியர் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் தற்போது சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக பதவி ஏற்றிருக்கும் நிலையில் லாக்கப்பில் கொடூரமாக தாக்கப்பட்டதால் மரணமடைந்த ஜெயராஜ் மற்றும் பெண்ணின் ஆகியோர்களுக்கு நீதி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web