"புதிய மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்"உயர் நீதிமன்றம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளது நீதிமன்றம்!
 
"புதிய மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்"உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் எங்கு சென்றாலும் கனிம வளம் வனவளம் மக்கள்  வளம் அனைத்தும் காணப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு சிறப்பினையும் சிறப்பு உணவு பொருட்களும் சிறப்பான சுற்றுலா தளங்களும் உள்ளன. மேலும் தமிழகத்தில் தலைநகரமாக உள்ள சென்னை வந்தாரை வாழவைக்கும் பூமியாக உள்ளது.தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை உலகில் உள்ள அனைவருக்கும் சுற்றுலா தளமாக காணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு போன்ற பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

high court

 தமிழகத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்திலுள்ள பெரிய மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு அவைகள் தனி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவானது. மேலும் ராணிப்பேட்டை பிரிக்கப்பட்டது .இந்நிலையில் இதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சி என்ற பகுதியானது தனியாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 

இருப்பினும் கள்ளக்குறிச்சியில்  அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இல்லாதது பல்வேறு இன்னல்களை உருவாக்கியது. உயர் நீதிமன்றம் ஆனது தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்க அனுமதித்துள்ளது. மேலும் ஒப்புதலை பெற்று பணிகளை தொடங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கோயில் நிலத்தை மதிப்பீடு செய்ய  எஸ்பிஐ வங்கி மதிப்பீட்டாளர் ஐ நியமித்தும் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு கோயில் நிலத்தை குத்தகைக்கு விடுவதற்கு எதிராக மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் தற்போது உயர் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தமிழக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web