புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ திடீர் ராஜினாமா: பாஜகவில் இணைகிறாரா?

தமிழகம் புதுவை மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அந்தந்த மாநிலங்களில் உள்ள எம்எல்ஏக்கள் திடீர் திடீரென தங்களது கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்
ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் 12 எம்எல்ஏக்கள் எம்பிக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் புதுவையிலும் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகிய 3 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்
இந்த நிலையில் தற்போது புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி எம்எல்ஏ ஜான்குமார் என்பவரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் சற்றுமுன் சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜான்குமார் எம்எல்ஏ விரைவில் பாஜகவில் இணைவார் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது