இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு பரவிய புதிய கொரோனா: சென்னை, கொல்கத்தாவில் அதிர்ச்சி!

 

உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வரும் நிலையில் தற்போது தான் ஓரளவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது 

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் திடீரென புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று பரவி வருவதாகவும் இது மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும் கூறப்படுவதால் மனித இனத்திற்கே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 

corona

இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்கள் பலர் இங்கிலாந்தில் சிக்கிக் கொண்டுள்ளனர் 

இந்த நிலையில் சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு இங்கிலாந்தின் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சென்னையை அடுத்து இங்கிலாந்திலிருந்து கொல்கத்தா வந்த விமானத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் போல் இங்கிலாந்திலிருந்து பரவும் கொரோனா வைரஸ்ஸும் இந்தியாவில் மிக வேகமாக பரவி விடுமோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே புதிய கொரோனா வைரஸால் இந்தியர்கள் 3 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

From around the web