24 மணி நேரத்தில் 13756 பேருக்கு புதிதாக கொரோனாவா? எங்கே இவ்வளவு ஆதிக்கம்?

ஆந்திர மாநிலத்தில்  24 மணிநேரத்தில் புதிதாக 13756 பேருக்கு கொரோனா பாதிப்பு உருவாகியுள்ளது!
 
corona

தற்போது நம் நாட்டில் அதிகமாக பரவும் நோய்களில் மிக பெரிய இடத்தை பிடிப்பது கொரோனா வைரஸ். மேலும் கடந்த ஆண்டு இந்தியாவில் பரவத் தொடங்கியது கொரோனா.ஆனால் இந்தியாவின் பெரும் முயற்சியால் கடந்த ஆண்டு இந்த கொரோனா நோயானது கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டு அனைவரும் எதிர்பாராதவிதமாக இந்நோய் மீண்டும் அதிகரித்துள்ளது அனைவருக்கும் வேதனை அளிக்கிறது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு மிகவும் கடுமையானதாக காணப்படுகிறது.andra

இத்தகைய சூழ்நிலையில் மகாராஷ்டிரா டெல்லி போன்ற மாநிலங்களில் இந்த கொரோனா நோயில் பாதிப்பானது தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால் தமிழகம் கேரளம் புதுச்சேரி ஆந்திரா கர்நாடகாவில் கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாக கூறப்படுகிறது. அதன்படி நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13 ஆயிரத்து 756 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 104 பேர் கொரோனா உயிரிழந்துள்ளனர்.

 இதனால் அங்கு உயிரிழந்துள்ள எண்ணிக்கை 10738 ஆக உயர்ந்து காணப்படுகிறது. இன்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 392 பேர் குணமடைந்து உள்ள நிலையில் அங்கு சிகிச்சை அளிக்கப்படுபவரின் எண்ணிக்கை 1.73 லட்சம் காணப்படுகிறது. இதனால் ஆந்திராவில் இந்த கொரோனாவின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுவது தெரிய வந்துள்ளது.

From around the web