10ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர்களுக்கு சிக்கல்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் உள்பட அனைத்து பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது ஏற்கனவே ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வும் ரத்து செய்யப்பட்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுதேர்வு அடிப்படையிலும் வருகை பதிவேடு அடிப்படையிலும் மதிப்பெண்கள் வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது இதனடிப்படையில் தற்போது மதிப்பெண்கள் வழங்கப்பட்டுக்
 
10ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர்களுக்கு சிக்கல்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் உள்பட அனைத்து பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

ஏற்கனவே ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வும் ரத்து செய்யப்பட்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுதேர்வு அடிப்படையிலும் வருகை பதிவேடு அடிப்படையிலும் மதிப்பெண்கள் வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது

இதனடிப்படையில் தற்போது மதிப்பெண்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு எந்த மதிப்பெண் போடுவது என்ற குழப்பம் ஏற்பட்டது.

இதனை அடுத்து சமீபத்தில் தேர்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில் காலாண்டு அரையாண்டு தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்களை அளித்து தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இதனை அடுத்து காலாண்டு அரையாண்டு தேர்வு தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியானது

இந்த நிலையில் தற்போது திடீரென புது குழப்பமாக காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை முழுமையாக எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட வேண்டும் என தேர்வுத்துறை சுற்றறிக்கை வெளியீட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஏற்கனவே பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பாஸ் என்று அறிவித்த நிலையில் தற்போது தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் என்று போட வேண்டும் என்று வெளியான உத்தரவால் பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது

From around the web