குஜராத்தில் புதிய முதல்வர்; "பூபேந்திர படேல்"  பதவியேற்பு!

குஜராத் மாநிலத்தின் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்றுள்ளார்
 
bhupendra patel

தற்போது நம் இந்தியாவில் ஒன்றிய அரசாக செயல்பட்டு வருகிறது பாஜக. மேலும் தற்போது இந்தியாவில் பாஜக நிலைமையானது மிகவும் வலிமையாக காணப்படுகிறது. மேலும் பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவிற்கு வரவேற்புகள் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களாக முதல்வர்கள் பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.  முதலில் சில தினங்கள் முன்பாக கர்நாடக மாநில முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்தார்,vijay ruppani

அதையடுத்து சில தினங்களுக்குப் பின்னர் வேறு ஒருவர் முதல்வராக அறிவிக்கப்பட்டார். இவை தொடர்ந்து நம் இந்தியாவில் நடந்து வருகிறது. அதன் வரிசையில் குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த விஜய் ரூபானி சில தினங்களுக்கு முன்பாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவர் நேரடியாக சென்று ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

இந்நிலையில் தற்போது குஜராத் மாநிலத்தில் பூபேந்திர படேல் முதல்வராக பதவியேற்றுள்ளார். அதன்படி குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல்  பதவி ஏற்றுக் கொண்டார். முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானி திடீரென பதவி விலகியதை அடுத்து புதிய முதல்வரானார் பூபேந்திர படேல்.

From around the web