மீண்டும் மத்திய அமைச்சர் ஆகிறாரா பொன்.ராதாகிருஷ்ணன்? பாஜகவுக்கு குவியும் கண்டனங்கள்

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் அவர்கள் நேற்று மாலை உடல்நலக் கோளாறு காரணமாக காலமானார். அவரது உடல் தற்போது திநகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும், பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் அவர்கள் மறைவு அடைந்ததால் அந்த தொகுதி காலியானதாக விரைவில் அறிவிக்கப்படும் என்பதால் அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில்
 

மீண்டும் மத்திய அமைச்சர் ஆகிறாரா பொன்.ராதாகிருஷ்ணன்? பாஜகவுக்கு குவியும் கண்டனங்கள்

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் அவர்கள் நேற்று மாலை உடல்நலக் கோளாறு காரணமாக காலமானார். அவரது உடல் தற்போது திநகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும், பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் அவர்கள் மறைவு அடைந்ததால் அந்த தொகுதி காலியானதாக விரைவில் அறிவிக்கப்படும் என்பதால் அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதி எம்பி காலமடைந்து அவரது உடல் கூட புதைக்கப்படாத நிலையில் பாஜகவினர் சிலர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் ’மீண்டும் பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராகிறார்’ என்று பதிவு செய்து வருகின்றனர்

இது குறித்து நெட்டிசன்கள் ’மனசாட்சியே இல்லாமல் சக மனிதன் ஒருவர் இறந்ததை கொண்டாடும் விதமாக பாஜகவினர் இப்படி கொடூரமாக நடந்து கொள்வதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் விரைவில் நடைபெறவிருக்கும் கன்னியாகுமாரி இடைத்தேர்தலில் பொன் ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவாரா? அல்லது திமுக போட்டியிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web