நெல்லை பல்கலைக்கழகம் திடீர் மூடல்: அதிர்ச்சி காரணம்

தமிழகத்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகம் திடீரென மூடப்பட்டதால் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் நெல்லை மனோன்மணியம் பல்கலைகழக ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பல்கலைக்கழகத்தை உடனே மூடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இதனை அடுத்து கல்லூரி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாகவும் அதற்காக பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கல்லூரிக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது நெல்லை
 

நெல்லை பல்கலைக்கழகம் திடீர் மூடல்: அதிர்ச்சி காரணம்

தமிழகத்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகம் திடீரென மூடப்பட்டதால் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

நெல்லை மனோன்மணியம் பல்கலைகழக ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பல்கலைக்கழகத்தை உடனே மூடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இதனை அடுத்து கல்லூரி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாகவும் அதற்காக பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கல்லூரிக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

நெல்லை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஒரே ஒரு ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக ஊழியர் தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருடைய உடல் சீரான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது

மனோன்மணியம் பல்கலை கழகத்தில் சுமார் 65 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் 91 இணைப்பு கல்லூரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

From around the web