நெல்லை, குமரி, தென்காசி மூன்று மாவட்டங்கள் மகிழ்ச்சி காரணம் கனமழை!

அடுத்த 24 மணி நேரங்களில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
rain

தற்போது தமிழகத்தில் கோடை காலம் நிலவுகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த எரிச்சலுடன் உள்ளனர். காரணம் என்னவெனில் இந்த கோடைகாலம் தொடங்கினால் வெயிலின் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகமாக காணப்படும். மேலும் ஒரு சில பகுதிகளில் வெயிலின்  தாக்கமானது சில டிகிரி செல்சியஸ் அதிகமாகவே காணப்படும். இதனால் மக்கள் வெளியே செல்வது கூட தயங்குவர். மேலும் தமிழகத்தில் சில தினங்களாக பல பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.weather

ஆனால் இவற்றில் சில பகுதிகளில் மழையும் கனமழை பெய்து அப்பகுதியில் வெயில் தாக்கத்தை குறைத்துள்ளது. மேலும் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையமானது ஒரு மூன்று மாவட்டத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதன்படி திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் தென் தமிழக மாவட்டம் ,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டம், உள் மாவட்டங்களில், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்.இதனால் தென் தமிழகம் மற்றும் குமரி நெல்லை தென்காசி மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

From around the web