இஸ்ரோ ஊழியருக்கு கொரோனா: இழுத்து மூடப்பட்டதால் பரபரப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ மையத்தில் பணிபுரிந்த ஒரு இளைஞருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட்டத்தை அடுத்து இஸ்ரோ மையம் மூடப்பட்டுள்ளதால் பெரும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி என்ற பகுதியில் இந்திய அரசுக்கு சொந்தமான இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது என்பது தெரிந்ததே. இதில் ராக்கெட்டுக்கள், செயற்கைக்கோள்களுக்கு தேவையான முக்கிய பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதன்பின் இந்த
 
இஸ்ரோ ஊழியருக்கு கொரோனா: இழுத்து மூடப்பட்டதால் பரபரப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ மையத்தில் பணிபுரிந்த ஒரு இளைஞருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட்டத்தை அடுத்து இஸ்ரோ மையம் மூடப்பட்டுள்ளதால் பெரும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி என்ற பகுதியில் இந்திய அரசுக்கு சொந்தமான இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது என்பது தெரிந்ததே. இதில் ராக்கெட்டுக்கள், செயற்கைக்கோள்களுக்கு தேவையான முக்கிய பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதன்பின் இந்த பொருட்கள் ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவிற்கு கொண்டு செல்லப்படும்

நெல்லை இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சுமார் 600-க்கு மேற்பட்ட ஊழியர்களும், விஞ்ஞானிகளும், 1000க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும் பணியாற்றி வரும் நிலையில் இஸ்ரோவில் பணிபுரிந்து வந்த 28 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இளிஅஞர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.,

இந்த நிலையில்கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் நாகர்கோயில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்குக் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

மேலும் அந்த இளைஞர் வசித்த இஸ்ரோ குடியிருப்பு பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக இன்றும் நாளையும் நெல்லை இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் மூடப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

From around the web